Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழா; ... வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருமுடிக்கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க தேவசம்போர்டு வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
இருமுடிக்கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க தேவசம்போர்டு வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

06 நவ
2024
04:11

சபரிமலை; சபரிமலை வரும் பக்தர்கள் இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.


சபரிமலையில் பக்தர்கள் தலையில் ஏந்தி வரும் இருமுடி கட்டில் நெய் தேங்காய் மற்றும் தேங்காய், அரிசி, பன்னீர் , சாம்பிராணி, கற்பூரம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள் இருக்கும். இதில் நெய் தேங்காயில் உள்ள நெய் உடைத்து பாத்திரத்தில் எடுக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். தேங்காய்கள் 18 படிகள் ஏறும் போது அடிக்கப்படுகிறது. அரிசி பாயாச வழிபாடுக்காக கவுண்டர்களில் வழங்க முடியும். மீதமுள்ள சாம்பிராணி, பன்னீர், கற்பூரம் ,மஞ்சள் போன்ற பொருள்கள் மாளிகைப்புறம் கோயில் அருகே மலை போல குவிகிறது. இது போன்ற பொருட்களை பூஜைக்கு எடுக்க முடியாததால் பக்தர்கள் இதை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தந்திரி, மேல் சாந்தி போன்றோர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனினும் பக்தர்கள் காணிக்கையாக இதைக் கொண்டு வந்து மாளிகை அருகே போடுகின்றனர். இவை டிராக்டரில் அள்ளப்பட்டு காட்டுப் பகுதியில் எரிக்கப்படுகிறது. இதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை கொண்டுவர வேண்டாம் என்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. குரு சுவாமிகள் இது தொடர்பாக பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. அதுபோல வரும் சீசனில் 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமும் , பத்தாயிரம் பேர் ஸ்பார்ட் புக்கிங் மூலமும் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைன் முன் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்ய முடியாமல் ஸ்பாட் புக்கிங் செய்ய வரும் பக்தர்கள் கையில் கட்டாயமாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று தேவசம்போர்டு கூறியுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள வசதியாக கியூ ஆர் கோடு மற்றும் புகைப்படம் அடங்கிய பாஸ் வழங்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar