பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2024 12:11
கோவை ; கோவை பெரியநாயக்கன் பாளையம், குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி நிறைவு நாள் முடிந்து இன்று திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து. நிறைவாக இன்று திருக்கல்யாண வைபோகம் இனிதே நடைபெற்று கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றது. இதில் வள்ளி தேவசேனாயுடன் முருகப்பெருமான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.