Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுக்காம்பட்டி வாஸ்தீஸ்வரர் கோயில் ... திருப்பூர் கோவில்களில் வேலவன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம் திருப்பூர் கோவில்களில் வேலவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மண்டல சீசனுக்காக புல்மேடு வனப்பாதை சீரமைப்பு பணி துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை மண்டல சீசனுக்காக புல்மேடு வனப்பாதை சீரமைப்பு பணி துவங்கியது

பதிவு செய்த நாள்

09 நவ
2024
08:11

கூடலுார்: சபரிமலை சீசனுக்காக வண்டிப்பெரியாறிலிருந்து வல்லக்கடவு வழியாக ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் புல்மேடு வனப்பாதையை சீரமைக்கும் பணியை வனத்துறையினர் துவக்கினர்.


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசன் நவ., 16ல் துவங்குகிறது. ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல குமுளி, எரிமேலி, பம்பை வழியாக ஒரு பாதையும், வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு, புல்மேடு வழியாக மற்றொரு பாதையும் உள்ளது. குமுளியில் இருந்து பம்பை வழியாக செல்ல 150 கி.மீ., பயணிக்க வேண்டும். ஆனால் புல் மேடு வழியாக 36 கி.மீ.,ல் கோயிலை அடைந்து விடலாம். 2010 ஜனவரியில் புல்மேட்டில் மகரஜோதி தரிசனம் முடித்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 102 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து புல்மேடு வனப்பாதை மூடப்பட்டது. அங்கிருந்து 14 கி.மீ., தூரம் உள்ள சத்திரத்திலிருந்து கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்தாண்டு புல்மேடு வனப்பாதையில் பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். சீசன் துவங்க ஒரு வாரமே உள்ள நிலையில் வண்டிப்பெரியாறு புல்மேடு வனப்பாதையை பெரியாறு புலிகள் சரணாலய மேற்கு துணை இயக்குனர் சந்தீப் மேற்பார்வையில் வனத்துறையினர் சீரமைக்கும் பணியை துவக்கினர். பாதையில் அடர்ந்து வளர்ந்துள்ள செடிகளை அகற்றி வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: புல்மேடு, சத்திரம் வனப்பாதையில் ஒவ்வொரு அரை கி.மீ., தூர இடைவெளியில் குடிநீர் வழங்குவதற்கான பணி நடக்கிறது. மேலும் சன்னிதானம் வரை பக்தர்கள் வனப்பாதையில் நடந்து செல்லும்போது வனவிலங்குகள் தாக்குதல் ஏற்படாமல் தடுக்க வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க ட்ரோன் கேமராவும் பயன்படுத்தப்படும் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar