காலகாலேஸ்வரர் கோவிலில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்ற திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2024 06:11
கோவில்பாளையம்; கோவில்பாளையத்தில் பாடல் பெற்ற காலகாலேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில் பழமையானது. பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு ஆறுமுகங்களுடன், 12 கரங்களுடன், கால சுப்பிரமணியசாமி வீற்றிருக்கிறார். இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 7ம் தேதி காலை அபிஷேக பூஜை நடந்தது. கரட்டுமேடு மருதாசல கடவுள் கோவிலில் வேல் பெறப்பட்டது. மாலையில் வீரபாகு தூது நடந்தது. சூரனை, சேவலும், மயிலுமாக, முருகப் பெருமான் ஏற்று அருளினார். இரவு பிராயசித்தி வேள்வி பூஜை நடந்தது. உற்சவர் திருவீதி உலா நடந்தது. மறுநாள் காலை 10:15 மணிக்கு, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து இரவு மயில் வாகனத்தில் முருகப்பெருமான் திருவீதி உலா வந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். நள்ளிரவு வரை பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலை மோதியது. கோவை, அன்னூர், சரவணம்பட்டியைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.