பதிவு செய்த நாள்
11
நவ
2024
12:11
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவினை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
உலகப் புகழ்ப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது, இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று சுவாமி திருவீதி உலா நடைபெற்றது, அருள்மிகு பெருவுடையார் பெரியநாயகி திருவுருவ செப்பு திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மாமன்னர் ராஜராஜ சோழன், பட்டத்தரசி லோகமாதேவி திருமேனிகளும், மற்றும் ராஜேந்திர சோழன் திருமேனி காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் சுவாமிகள் அவர்களால் அளித்த தங்க கிரீடத்துடன் தஞ்சையின் நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா நடைபெற்றது, முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து மகாதீபாரதனை காட்டப்பட்டது, பின்னர் மங்கள வாத்தியங்கள் இசைக்க, 50க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளுடன் சிவகணங்கள் இசைக்க, தப்பாட்டம் கோலாட்டம் பம்பை கரகாட்டம் கோலாட்டம் ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் சுவாமி புறப்பாடு நடைபெற்றது, இதில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்,