கோயிலில் அம்பிகை நின்றும், அமர்ந்தும் அருள் செய்யும் கோலத்தை பார்த்திருப்பீர்கள். வானத்தை பார்த்தபடி இருக்கும் அம்மனை தரிசனம் செய்ததுண்டா...
திருநெல்வேலி அம்பாசமுத்திரம், விருதுநகர் முறம்பு ஆகிய ஊர்களில் வண்டிமறிச்சம்மன் என்ற பெயரில் அம்பிகை படுத்தவாறு வானத்தை பார்த்தபடி காட்சி தருகிறாள். இதே போல் பொள்ளாச்சி ஆனைமலையில் மாசாணியம்மன் என்ற பெயரிலும் இக்கோலத்தில் அருள் செய்கிறாள். அதாவது வானத்தில் உள்ள தேவர்களையும் காப்பதற்காக இப்படி இருக்கிறாள்.