வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு கூமாபட்டியில் முத்தாலம்மன் கோயில் பொங்கல் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. நவ.7ல் காப்பு கட்டுடன் பொங்கல் திருவிழா துவங்கியது. நேற்று இரவு அம்மனின் புதிய சிலைக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. 7ம் நாளான இன்று காலை 6:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்கள் நேர்த்திகடன்களை செலுத்தி வழிபட்டனர். தேர் ரத விதிகள் சுற்றி வந்து மதியம் 12:50 மணிக்கு நிலையம் அடைந்தது. பின்னர் தேரில் இருந்து அம்மனை மக்கள் மேளதாளம் வழங்க வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள், முளைப்பாரி வழிபாடு, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அம்மனை நீரில் கரைப்பதற்காக கண்மாய் கரைக்கு பக்தர்கள் ஊர்வமாக கொண்டு சென்றனர். அப்போது பக்தர்கள் பூக்கள் தூவி வழியனுப்பினர்.