வட மாநிலங்களில் தேவ் தீபாவளி; விளக்கு ஏற்றி மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2024 12:11
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியான இன்றைய தினம் தேவ் தீபாவளி கொண்டாடப்படுவது அப்பகுதிகளில் வழக்கம். அதன்படி இன்று வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தீபாவளிக்கு அடுத்து வரும் பவுர்ணமி தினத்தில் தெய்வங்கள் கொண்டாடும் தீபாவளியை, தேவ்தீபாவளியாக வட மாநிலத்தவர்கள் கொண்டாடுகின்றனர். உத்தராகண்ட் ஹரிதுவாரில் பவுர்ணமி தேவ் தீபாவளியையொட்டி, பக்தர்கள் கோயில்களில் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் விளக்கொளியில் நேற்று ஜொலித்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.