மயிலாடுதுறையில் துலா உற்சவ திருத்தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2024 02:11
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கடைசி 10 நாள் உற்சவம் மிகவம் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு கடந்த மாதம் 17ம் தேதி ஐப்பசி மாத முதல்நாள் தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. இதில் முக்கிய விழாவாக கடந்த 6ம் தேதி திருக்கொடியேற்றமும், 12ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. திருத்தேரோட்டம் நடந்தது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தான மாயூரநாதர் சுவாமி கோயிலில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, வள்ளிதெய்வானை சமேத சுப்ரமணியர் பஞ்ச மூர்ததிகளடன் 3 தேர்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வடம்பிடித்து இழுத்து திருத்தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, நகராட்சி தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோயிலின் 4 வீதிகளை சுற்றி தேர் நிலையை அடைந்தது. இதேபோல் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் சுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் திருத்தேருக்கு எழுந்தரள சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் வடம்பிடித்து இழுத்து திருத்தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். கோயிலின் நான்கு வீதிகளை சுற்றி தேர் நிலையை அடைந்தது. துலா உற்சவத்தின் முக்கிய விழாவாக இன்று கடைமுக தீர்த்தவாரி உற்சவம் மதியம் 1 மணியளவில் நடக்கிறது.