பதிவு செய்த நாள்
15
நவ
2024
03:11
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் ஐப்பாசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் முன் பக்தர்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலை: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள், கிரிவலம் சென்றனர். அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமியன்று, பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அதிகாலை, 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாரதனைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய 2 கி.மீ துாரம் பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது. கிரிவல பாதையில், ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. பவுர்ணமியொட்டி, அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம், ஆகியவை ரத்து செய்யப்பட்டன.