பதிவு செய்த நாள்
17
நவ
2024
06:11
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழநி காந்தி ரோட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகம் விழா நவ. 16 ல் முதற்கால வேள்வி மங்கல இசையுடன் துவங்கியது. குரு வணக்கம், இறைவழிபாடு, புனித நீர் வழிபாடு, காப்பு அணிவித்தல், பூமி வழிபாடு, வேள்வி சாலை புகுதல், வேள்வி வழிபாடு ஆகியவற்றுடன் முதல் கால வேள்வி நடைபெற்றது. நேற்று (நவ. 17) காலை மங்கல இசையுடன் திருமகள் வழிபாடு, திருவிளக்கு ஏற்றுதல், வேண்டுதல் விண்ணப்பம், கண் திறத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் இரண்டாம் கால வேள்வி நடைபெற்றது. யாக சாலையில் வைக்கப்பட்ட திருக்குடங்கள் மங்கள இசை உடன் கோயிலை சுற்றி வலம் வந்தது, காலை 9:55 மணிக்கு மூலவர், பரிவார மூர்த்திகளுக்கான விமான, கலச கும்பாபிஷேகம் நடைபெற்றது. இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ்,உதவி கமிஷனர் லட்சுமி கலந்து கொண்டனர்.