வேம்பத்தூர் சிவன் கோயிலில் சிவ பூஜை ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2024 10:11
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் சிவன் கோயிலில் நடைபெற்ற சிவ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் ஆவுடைய நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் நேற்று மதுரையைச் சேர்ந்த நால்வர் குழு சார்பில் சிவபூஜை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை சுவாமிகளுக்கு பால்,பன்னீர்,தயிர்,சந்தனம், இளநீர், குங்குமம், திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்ற பின்னர் சிவாச்சாரியார்களால் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவபூஜையில் வேம்பத்தூர் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.