பதிவு செய்த நாள்
20
நவ
2024
08:11
திருப்பூர், அவிநாசி அடுத்த சேவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் இன்று அதிகாலை புனராவத்தன ஜீர்ணோத்தாரண ரஜத பந்தன மஹா கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடந்தது.
அவிநாசி வட்டம் சேவூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில், இன்று அதிகாலை 4:50 மணிக்கு மேல் 5:15 மணிக்குள் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, மிருத்சங்கிரஹணம்,ஸ்ரீ ஹரிஹர பஞ்சாசனம் உள்ளிட்டவைகளுடன் முதல் கால வேள்வி யாக பூஜைகள் துவங்கியது. நேற்று ஸ்ரீ ஹரிஹர புத்திர ஆச்சார்ய வர்ண பூஜை,ஸ்ரீ ஹரிஹர புத்திரனுக்கு ரஜதபந்தனம், எந்திர ஸ்தாபனம் ஆகியவற்றுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று நான்காம் கால வேள்வி பூஜையில் யாத்ரா தானம், கடம் புறப்படுதலுடன் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின் மூலவர்களுக்கு மஹா கும்பாபிஷேகமும், மஹாபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.