பதிவு செய்த நாள்
20
நவ
2024
11:11
பல்லடம்; அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்கவே வேல் வழிபாடு நடத்தப்பட்டு வருவதாக, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காளீஸ்வரர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட, செஞ்சேரிமலையில், ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் நேற்று வேல் வழிபாடு நடந்தது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது: ஹிந்து அன்னையர் முன்னணி சார்பிலான வேல் வழிபாடு, கடந்த ஆண்டு சென்னிமலையில் ஆரம்பித்து பழனியில் வழிபாடுடன் துவங்கியது. நடப்பு ஆண்டு ஆக., மாதம் திருப்பூர் கொங்கணகிரி கோவிலில் துவங்கிய வேல் வழிபாட்டை, அழகுமலையில் நிறைவு செய்ய தீர்மானித்துள்ளோம். இதற்கிடையே, சென்னிமலை, சிவன்மலை, பச்சை மலை, பவள மலை, கதித்த மலை, ஊதியூர் உள்ளிட்ட முருகன் கோவில்களில், வேல் வழிபாடு நடத்தப்பட்டு, தொடர்ந்து, வாகனத்தில் வைத்து அனைத்து ஒன்றியங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளோம். இந்த வேல், அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்பாற்றியது. அதர்மத்தை அளிக்கவே இந்த வேல் வழிபாடு பயணம் நடந்து வருகிறது. செஞ்சேரிமலை சுற்றுவட்டாரத்தில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. முருகப்பெருமானின் இந்த மலையை, கிறிஸ்தவ மலையாக மாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சர்ச்களை அகற்ற வேண்டும். பல கோடிகள் வருவாய் ஈட்டும் தமிழக அரசு, இக்கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
தமிழக அரசு, ஹிந்துக்களுக்கு மட்டும் விரோதமான நாத்திக அரசாகும். நாமக்கல் மாவட்டத்தில் பெண்கள் குறித்து ஒருவர் கேவலமாக பேசியபோது, இது கருத்துரிமை என்று கூறிய இதே நாத்திகவாதிகள், தற்போது, கருத்து சொல்பவர்களை எல்லாம் கைது செய்து வருகிறது. குறிப்பாக, ஹிந்து இயக்கங்களை சேர்ந்தவர்களை குறிவைத்து கைது செய்கின்றன. இதன் பலனை வரும் 2026ல் அனுபவிப்பார்கள். ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் எத்தனையோ அறிவிப்பை வெளியிடுகிறார். ஆனாலும், எத்தனையோ கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் உள்ளன. அதிக இடங்களில், அறநிலையத்துறை அதிகாரிகளாக கிறிஸ்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தெலுங்குர்களைப் பற்றி நடிகை கஸ்தூரி பேசியது தவறு. அதேசமயம், அவர் கைது செய்யப்பட்டதையும் கண்டிக்கிறோம் என்றார். செஞ்சேரிமலையில் உள்ள குழந்தை குமாரர் முருகன் சிலை பல நாட்கள் ஆகியும் மாற்றப்படவில்லை. இச்சிலையை போக மாற்றப்படாவிட்டால், ஹிந்து அறநிலையத் துறையை கண்டித்து, விரைவில் மாபெரும் போராட்டம் செஞ்சேரிமலையில் நடத்தப்படும் என்றார்.