திருவையாறு அருகே உள்ள ஐயாறப்பர் கோயிலை சுற்றி உள்ள அந்தணர்குறிச்சி, தில்லைஸ்தானம், கும்பகோணம் சாலை உள்ளிட்ட இடங்களில் அருள்பாலித்து வரும் ரிஷிநந்தி விநாயகர், நந்தியம் பெருமான், கொலைஆயிரம் கொண்டாள் அம்மன், அடைக்கலம் காத்த அம்மன், கருப்புவீரன், முனீஸ்வரர், நாகநாதர், நாககன்னி, மதுரைவீரன் உள்ளிட்ட 11 கோயிலின் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா தருமபுர ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.