பதிவு செய்த நாள்
21
நவ
2024
12:11
இளையான்குடி; இளையான்குடி அருகே பெரும்பச்சேரி மேலத் தெருவில் உள்ள வேல்முருகன் கோயிலில் நடைபெற்ற வருடாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரும்பச்சேரி மேல தெருவில் உள்ள வேல்முருகன் கோயிலில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு பால், பன்னீர்,சந்தனம், தயிர்,இளநீர்,குங்குமம், பழங்கள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அர்ச்சகர் கெட்டி ஜிவி தலைமையில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்களுக்கு பூஜைகள் செய்த பின்னர் அபிஷேகம் நடைபெற்று, வேல்முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் முன்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பெரும்பச்சேரி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் இளையான்குடி,பெரும்பச்சேரி, பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.