பதிவு செய்த நாள்
21
நவ
2024
05:11
காஞ்சி மகாபெரியவர் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு, மதுரையில் அழகர்கோவில் அருகே பொய்கை கரைப் பட்டியில் கோயில் கட்டப்படவிருக்கிறது. இந்த திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்கலாம்.
இது குறித்து மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம், உள்ளிட்ட பல வைபவங்களுக்காக காஞ்சி மகா பெரியவர் மதுரைக்கு பலமுறை விஜயம் புரிந்துள்ளார். அவருக்கு திருமாலிருஞ்சோலை என்னும் கள்ளழகர் கோயில் அருகே பொய்கை கரைப் பட்டியில் மலை அடிவாரத்தில், மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் திருக்கோயில் கட்டப்பட இருக்கிறது.
நிதி வழங்கலாம்; இதற்கான பூர்வாங்க பணிகள் பொய்கைக்கரைப் பட்டியில், தொடங்கப்பட உள்ளன. பக்தர்கள் திருப்பணிக்குப் பணமாகத் தருவது மட்டுமின்றி கட்டிட தளவாட சாமான்கள், இதர பொருட்களாக வாங்கிக் கொடுக்கலாம். கோயில் அமைவிடம், கட்டுமானத்தைச் சேர்த்து சதுர அடிக்கு ரூ. 3 ஆயிரத்து 500 ஆகுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. அன்பர்கள் சதுரடி வீதமாகவும் உதவலாம். ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் நன்கொடை தருவோரின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்படும். நன்கொடைகளுக்கு 80ஜி வருமான வரி விலக்கும் உண்டு. விவரங்களுக்கு 94426 30815 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்கொடைகளை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட், மதுரை மேல ஆவணி மூல வீதி கனரா வங்கி கிளை கணக்கு எண்: 110031396472, ஐஎப்சி கோடு: CNRB0001010 என்ற கணக்கிற்கும் அனுப்பலாம். இவ்வாறு நெல்லை பாலு கூறியுள்ளார்.