பதிவு செய்த நாள்
22
நவ
2024
03:11
காஞ்சிபுரம்; உத்திரமேரூர் ஒன்றியம், நெய்யாடுபாக்கம் கிராமத்தில், மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வர் மற்றும் பட்டாபிராம சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 19ம் தேதி, காலை 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, தனபூஜை, மஹா கணபதி உள்ளிட்ட ஹோமம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு முதற்கால யாகபூஜை துவங்கியது. நேற்று, காலை 9:00 மணிக்கு பட்டாமிராமருக்கும், தொடர்ந்து மருந்தீஸ்வரர் மற்றும் பரிவாரங்களுக்கு வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
அகத்தீஸ்வரர் கோவில்; உத்திரமேரூர் ஒன்றியம், ஆள்வாரம்பூண்டி கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று, மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக, காலை 8:00 மணிக்கு, கோ பூஜை, தன பூஜை, வேதபாராயணம், தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து,10:00 மணிக்கு, யாக சாலையில் இருந்து, கலசங்கள் வேதமந்திரங்கள் முழங்க எடுத்து செல்லப்பட்டு, கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.