Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை திருப்பதி கோவிலில் பிப்., ... ஆலாந்துறை அஷ்ட பைரவர் கோவிலில் ஜென்மாஷ்டமி விழா ஆலாந்துறை அஷ்ட பைரவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 43வது பட்டமளிப்பு விழா
எழுத்தின் அளவு:
ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 43வது பட்டமளிப்பு விழா

பதிவு செய்த நாள்

22 நவ
2024
05:11

புட்டபர்த்தி ; ‘‘பண்பு, தனி மனிதர்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய கருவியாக பங்காற்றுகிறது,’’ என வி.ஐ.டி., பல்கலைக்கழக துணை வேந்தரான பேராசிரியர் டாக்டர் பஞ்சநாத சேதுராமன் தெரிவித்தார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், இன்று எஸ்.எஸ்.எஸ்.ஐ.எச்.எல்., எனும் ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின், 43வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில், கல்வியாளரும், வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான பேராசிரியர் டாக்டர் பஞ்சநாத சேதுராமன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உயர்கல்வியில் முன்மாதிரியான தலைமைத்துவத்துக்கும், புதுமையாக கற்பித்தலுக்கும், அர்ப்பணிப்புக்கும் பெயர் பெற்ற சேதுராமன், என்.சி.பி., எனும் தேசிய கல்வி கொள்கை – 2020ஐ, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆசியுடன், பட்டமளிப்பு விழா ஊர்வலத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் சாதனைகள், கல்வி, ஆராய்ச்சி, சேவைகள்  ஆகியவை அடங்கிய ஆண்டறிக்கையை துணைவேந்தர் வாசித்தார்.


பேராசிரியர் பஞ்சநாத சேதுராமன் பேசியதாவது: பண்புகளை உருவாக்குவதிலும், சேவையின் கருவியாக தனி மனிதர்களை உருவாக்குவதிலும் கல்வி முக்கியமாக பங்காற்றுகிறது. எஸ்.எஸ்.எஸ்.ஐ.எச்.எல்., என்பது ‘சுவாமிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டோர், மனித நேயத்துடன் அன்புடன் சேவையாக செய்வதாகும். இந்த பல்கலைக்கழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய தேசிய கல்வி கொள்கையில், ஐந்து புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம், கல்வியின் முக்கியத்துவத்தை  இம்மையம் எடுத்து காட்டுகிறது. கல்வியின் உண்மையான நோக்கமான, ‘கல்வியின் முடிவே குணாம்சம்’ என்று பகவான் விளக்கி உள்ளார்.


கல்விக்கு முக்கியமான பத்து ‘சி’க்கள் தேவை.

* ஆர்வம் (கியூரியாசிட்டி) – தொடர்ச்சியான கற்றல், ஆய்வுக்கான ஒரு தீப்பொறி.

* நம்பிக்கை (கான்பிடன்ஸ்) – தன்னை நம்புதல், சுவாமியின் போதனைகளில் வேரூன்றியது.

* ஒருங்கிணைப்பு (கன்வெர்ஜென்ஸ்) – அறிவு, மதிப்புகளை சரியான இணக்கத்துடன் ஒன்றிணைத்தல்

* ஒத்துழைப்பு (கொலாபிரேஷன்) – சுவாமியை வழிகாட்டியாக கொண்டு, தங்கள் பயணத்தை தொடருவோருக்கு நன்றி செலுத்துவது,

* மாற்றம் (சேஞ்ச்) – மாற்றத்தை ஒன்றே மாறாதது

* அர்ப்பணிப்பு (கமிட்மென்ட்) – நேர்மை, அர்ப்பணிப்புடன் சிறந்து விளங்குதல்

* தொடர்பு (கம்யூனிகேஷன்) – அறிவையும், மதிப்பையும் திறம்பட பகிர்தல்

* வழிப்பாதை ( கன்டியூட்) – சுவாமிகளின் அறிவுரையை பின் பற்றுதல்

* பாத்திரம் (கேரக்டர்) – வாழ்க்கையின் நோக்கமே அடித்தளம்


இவ்வாறு பத்து ‘சி’க்களை எப்போதும், நம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அமெரிக்காவில் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாவில், ‘தொடக்கம்’ என்ற சொல், ‘கற்றல், சேவையின் வாழ்நாள் பயணத்தின் துவக்கம்’ என்பதை எடுத்து காட்டுகிறது. இங்கு படித்து பட்டம் பெறும் மாணவர்களாகிய நீங்கள், கற்றுக்கொண்ட விஷயங்களை நிலைநிறுத்தி, சுவாமியின் தன்னலமற்ற சேவையை, அன்பின் தீபமாக ஏற்றி வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். உறுதிமொழி ஏற்ற மாணவர்களுக்கு, பட்டம் வழங்கப்பட்டது. பின், பகவானுக்கு மங்களாரத்தி காண்பிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar