பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2024 09:11
அவிநாசி; ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் படி சேவூர் பள்ளிவாசலைச் சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
அவிநாசி அடுத்த சேவூரில் முறியாண்டம்பாளையம் ரோட்டில்,ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவிற்காக அனைத்து பகுதிகளிலும் பக்தர்களை வரவேற்று, பல்வேறு தரப்பினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். அதில் சேவூர் வடக்கு வீதி தக்னி சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் மற்றும் ஏரிமேடு அன்வாருல் ஹீதா சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களை வரவேற்று பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். அதில் சேவூர் தக்னி சுன்னத் வல்ஜமாத் பள்ளி வாசலை சேர்ந்த முஸ்லிம்கள் கும்பாபிஷேக தினத்தன்று ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலுக்கு வந்தனர். அங்கு கும்பாபிஷேகம் விமர்சையாகவும் சிறப்பாகவும் நடத்திய ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகளை பாராட்டி கௌரவிக்கும் விதமாக ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டி சென்றனர்.