திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் 28ம் தேதி தெப்ப திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2024 04:11
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் உற்சவர் பெருமான் தீர்த்த குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி வரும் 28ம் தேதி மாலை 6:30 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி குளத்தின் சுற்றுச்சுவரில் வர்ணம் பூசப்பட்டு தெப்பம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.