Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி ... புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் பாத யாத்திரை புதுச்சேரியில் இருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில், மடங்களில் யானைகளை பராமரிக்க 39 விதிமுறைகள்; அறநிலையத்துறை அறிவுரை
எழுத்தின் அளவு:
கோயில், மடங்களில் யானைகளை பராமரிக்க 39 விதிமுறைகள்; அறநிலையத்துறை அறிவுரை

பதிவு செய்த நாள்

26 நவ
2024
01:11

ஸ்ரீவில்லிபுத்தூர்; தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் திருமடங்களில் பராமரிக்கப்படும் யானைகள் பராமரிப்பு தொடர்பாக 39 விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி செயல்பட வேண்டும் என தமிழக அறநிலையத் துறை அறிவுறுத்தி உள்ளது.


திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழப்பு, குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழகத்தில் அறநிலையத்துறை கோயில்கள் மற்றும் திருமடங்களில் உள்ள யானைகளை மிகுந்த கவனமுடன் பராமரிக்க தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி தமிழக அறநிலையத்துறை, யானைகளை கவனமுடன் பராமரிக்க 39 விதிமுறைகளை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி யானைகளை உறுதியான மண் அல்லது புல்தரையில் நிறுத்தி வைக்க வேண்டும். கால் பராமரிப்புக்கு மண் மற்றும் மணல் இருக்க வேண்டும். இயற்கையான ‌ வெளிச்சம், காற்றோட்டத்துடன் கான்கிரீட் கொட்டகை அமைக்க வேண்டும்.


யானையின் கால், நகக்கண், தந்தங்களில் தோக்கா மல்லி எண்ணெய் விட்டு பராமரிக்க வேண்டும். யானையின் எடை, வயதுக்கு ஏற்ப உணவுகளை உள்ளூர் கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் வழங்கப்பட வேண்டும். யானைக்கு வெப்பம் அதிகரிக்கும் போது அதனை சங்கிலியால் பிணைத்து தேவையான உணவு, தண்ணீர் அருகில் வைக்க வேண்டும். மது அருந்தியவரை யானையின் அருகில் செல்ல அனுமதிக்க கூடாது. ஆபத்தை விளைக்கும் செயல்களை செய்யக்கூடாது. யானைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உணவு அல்லது பணத்திற்காக பிச்சை எடுக்க யானையை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. யானை தங்கும் இடத்தில் சிறுநீர் தேங்கினால் நோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முறையான வடிகால் வசதி செய்ய வேண்டும். யானையை வாரத்திற்கு நான்கு முறையும், கோடை காலத்தில் தினமும் குளிப்பாட்ட வேண்டும். சாதாரண யானையின் உடல் எடையில் 5 சதவீத எடையளவு உணவு வழங்க வேண்டும். யானைகள் பராமரிப்பு பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். யானை பாகன்கள் கூடுமானவரை அங்குசத்தை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கோயில் திருவிழா, சாமி புறப்பாடு நாட்களில் யானையை கொண்டு செல்லும்போது பொதுமக்களிடம் காசுகள் பெறுவதையோ, ஆசிர்வாதம் செய்வதையோ அனுமதிக்க கூடாது. வாசனை திரவியங்களை பயன்படுத்துபவர்களை யானையின் அருகில் செல்ல அனுமதிக்க கூடாது. யானைகள் இல்லாத கோயில்களில் திருவிழாவிற்கு தனியார் யானைகளை பெற்று பயன்படுத்தக்கூடாது. பட்டாசுகள் வெடிக்கும் இடங்கள் மற்றும் மின் கருவிகள் உள்ள பகுதிகளில் யானைகளை அழைத்துச் செல்லக்கூடாது. தினமும் இருவேளை 5 முதல் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடை பயிற்சி அளிக்க வேண்டும். யானைகளை பராமரிப்பதற்கு வனத்துறையிடமிருந்து கோயில் நிர்வாகங்கள் ஓனர்ஷிப் சர்டிபிகேட் வைத்திருக்க வேண்டும். அதனை ஐந்தாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். யானைகள் பராமரிப்பு தொடர்பாக வனத்துறை சட்டப்படி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். என அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar