திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை மகாதீபத்தை சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்தனர். கார்த்திகை தீபத்திருவிழா மாநிலத்தின் பல்வேறு கோயில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவின் முக்கிய அம்சமான மகாதீப நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருத்தணி முருகன் கோயிலில், மாலை 05.30 மணியளவில் வெள்ளி மயில் வாகனத்தில் மலையை வலம் வந்த உற்சவர் முருகப் பெருமான், பின் கோயில் குருக்கள் சுதாகர், சொக்கப்பனை மரத்தில் தீபம் ஏற்றினார். இதனையடுத்து, பச்சரிசி மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகாதீப தரிசனத்தை 1லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.