கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் குவிந்த பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2026 10:10
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. இதில் சர்வ அலங்காரத்தில் மூலவர் வெங்கடேச பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.