Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைரியம் தந்த அனுமன் சாலிஸா: கேப்டன் ... உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் உக்கடம் கரி வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

03 அக்
2026
10:10

சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தின் மூன்றாவது வாரத்தை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.


சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், “சின்ன காஞ்சிபுரம்” என்று பக்தர்களால் அழைக்கப்படுவதுமான ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாவது வாரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி, கோவிலின் மூலவர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாளுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதேபோல், கோவில் உற்சவமூர்த்தியான பவளவண்ண பெருமாள், சீனிவாச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவமூர்த்தியை பக்தர்கள் பக்தியுடன் தரிசித்து வழிபட்டனர். மேலும், சீனிவாச பெருமாள் சன்னதி முன்பாக பெண்கள் கோவிலின் வரலாற்றை அழகிய கோலமாக வரைந்திருந்தனர். கோவிலின் வரலாற்றையும், பெருமாளின் சிறப்பையும் எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த கோலம், கோவிலுக்கு வந்த பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. புரட்டாசி மாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. புரட்டாசி மூன்றாவது வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாடுகளால், காலடிப்பேட்டை ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் இன்று பக்தி மயமாக காட்சியளித்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar