ராஜபாளையம்: திருக்கார்த்திகையை முன்னிட்டு, ராஜபாளையம் அருகே சஞ்சீவிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலுக்கு, நேற்று காலையில் இருந்து பக்தர்கள் சென்றனர். வனப்பகுதி வழியாக செல்லவேண்டும் என்பதால், வனத்துறையினர், போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணிக்கு அரோகரா கோஷத்துடன் தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்களுக்கு வேட்டை பெருமாள் கோயில் அருகே நடந்த அன்னதானத்தை, கோபால்சாமி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.