கார்த்திகை தீபத் திருவிழா; திருவண்ணாமலையில் மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2024 01:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சம்பந்த விநாயகர் சன்னதி முன் அண்ணாமலையாருக்கு மாலை அணிந்து ஏராளமான பக்தர்கள் விரதம் துவங்கினர். கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் காலை உற்சவத்தில் இன்று ராஜகோபுரம் முன் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.