சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே மணப்பட்டியில் நாய்க்குட்டியான் பைரவர் கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கோயில் அறக்கட்டளை சார்பில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று கோயிலில் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டது. இதையொட்டி சிவ வழிபாட்டுக்குழுவினர் சார்பில் திருவாசக முற்றோதல் நடந்தது. பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தவசீலன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.