பெரியகுளம்; பெரியகுளம் பகுதி சிவன் கோயில்களில் சோமவார சங்காபிஷேகம் நான்காம் வார நிறைவு பூஜை நடந்தது.
சிவன் கோயில்களில் கார்த்திகை மாதம் திங்கட்கிழமையில் சோமவார சங்காபிஷேக பூஜை நவ.18,25, டிச.2 மற்றும் இன்று டிச.9ல் நான்காம் வார நிறைவுபூஜை கோலாகலமாக நடந்தது. ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ருத்ரஹோமம் பூஜையுடன் துவங்கியது. 108 சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரருக்கு 108 வலம்புரி சங்கில் வில்வம் இலை போட்டு சங்காபிஷேகம் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தையல் நாயகி வைத்தீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. வரசித்தி விநாயகர் கோயிலில் சொர்ணபுரீஸ்வரர் சிவனுக்கு சங்காபிஷேக பூஜையில் பக்தர்கள் கையில் சங்கில் தீர்த்தம் ஏந்தி சென்றனர்.