பதிவு செய்த நாள்
09
டிச
2024
04:12
பொதட்டூர்பேட்டை; பொதட்டூர்பேட்டை நகரின் தெற்கில் ஆறுமுக சுவாமி மலையடிவாரத்தில் அமிர்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நித்திய வழிபாடுகளுடன், பிரதோஷம், ஆருத்ரா, சிவராத்திரி உள்ளிட்ட வழிபாடுகள் நடந்து வருகின்றன. திங்கட்கிழமையான இன்று சோம வார சிறப்பு உற்சவம் கொண்டாடப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவர் அகத்தீஸ்வரருக்கு காலை, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. அமிர்தவல்லி தாயார், கிளிக்கு பழம் கொடுக்கும் அலங்காரத்தில் அருள்பாலித்தார். விநாயகர், சுப்ரமணிய சுவாமி, துர்க்கை, தட்சணாமூர்த்தி, நந்தியம்பெருமான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளும், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதே போல, ஆர்.கே.பேட்டை அடுத்த, ஸ்ரீகாளிகாபுரம் பஞ்சாட்சர மலையில் அருள்பாலிக்கும் மரகதேஸ்வரர் கோவிலிலும் காலை சோம வார சங்காபிஷேகம் நடந்தது. இதில், ஸ்ரீகாளிகாபுரம், ஆர்.கே.பேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.