பதிவு செய்த நாள்
10
டிச
2024
04:12
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச., 16 முதல் ஜன., 13 வரை நடைதிறப்பதில் மாற்றம் செய்யப்படுகிறது.
மார்கழி முதல் நாள் முதல் 29 நாள்கள் வரை ராமேஸ்வரம் கோயிலில் தனுர்(மார்கழி)மாதம் பூஜை நடக்கும். அதன்படி டிச., 16 முதல் ஜன., 13 வரை கோயில் நடை அதிகாலை 3.30 மணிக்கு திறந்து 4:00 மணி முதல் 4:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை தரிசனம் நடக்கும். இதனைதொடர்ந்து காலை 5:00 மணிக்கு தனுர்மாத திருப்பள்ளி எழுச்சி பூஜையும், தேவாரம், திருவெம்பாவை ஓதுதல், மகாதீபாராதனை நடக்கும். காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, காலை 7:30 மணிக்கு விளா பூஜை, காலை 10 :00 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, 1:00 மணிக்கு திருக்கோயில் நடைசாத்தல், மதியம் 3 மணிக்கு நடை திறந்து, 3:30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை, இரவு 8:30 மணிக்கு பள்ளியறை பூஜை நடக்கும். மார்கழி மாத உற்சவத்தில் சுவாமி புறப்பாடு நாளில் பூஜை நேரங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.