அரசியல்கட்சி தலைவர்கள் நன்மை செய்வார்கள் என நம்பி, அவர்கள் பின்னால் செல்லும் ஏமாளி ஜனங்கள் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், யார் பின்னால் போக வேண்டும், யாருக்கு வழிவிட்டு நிற்க வேண்டும் என்று சாஸ்திரம் சில விதிகளைச் சொல்லியிருக்கிறது. *பஞ்சமகா யக்ஞத்தை ( ஐந்து வகை யாகம்) தவறாமல் செய்யும் ஒரு வேதியர் வந்தால், அவருக்கு வழிவிட்டு பின்னால் செல். *கர்ப்பவதி வந்தால் அவளுக்கு வழிவிட்டு பின்னால் போ. *பசுக்கள் பின்னால் வந்தால், அதற்கு வழிவிட்டு பின்னால் போ. *யானை பின்னால் வந்தால், அதை முதலில் விட்டு பின்னால் நட. *கனமான பொருளை சுமந்து கொண்டு ஒருவர் பின்னால் வந்தால், அவருக்கு வழிவிட்டு தொடர்ந்து செல். இவற்றில் பசுக்களின் பின்னால் சென்றால், அதன் பாததூளி (தூசு) நம் மீது பட்டு உடல் சுத்தம், பேச்சு சுத்தம், மனச்சுத்தம் ஏற்படும்.