Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் காலை பதம் பார்க்கும் ... இரும்பாடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை வழிபாடு இரும்பாடி பாலமுருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் இழுபறி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் இழுபறி

பதிவு செய்த நாள்

10 டிச
2024
05:12

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் ஓராண்டுக்கு மேலாகியும் நிறைவடையாமல் இழுபறியில் உள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவையின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றாகவும், முக்தி தலமாகவும், ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் முடிவடைந்ததால், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 3.5 கோடி ரூபாய் மதிப்பில், கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.


இதனை அடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம், கும்பாபிஷேக பணிகள் துவங்குவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. அதன்பின், கும்பாபிஷேகப் பணிகள் துவங்கப்பட்டது. தற்போது, பணிகள் துவங்கப்பட்டு, 15 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும், பணிகள் முற்றிலும் நிறைவடையாமல் உள்ளது. கும்பாபிஷேக பணிகள் காரணமாக கடந்தாண்டு, இக்கோவிலின் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர தேர்திருவிழா, கோவிலின் உட்புறத்திலேயே நடந்தது. தேர் ஓடவில்லை. பங்குனி மாதத்திற்கு முன்பே, கும்பாபிஷேகம் நடந்தால் மட்டுமே, வழக்கம்போல தேர் திருவிழா நடக்கும். ஆனால், கும்பாபிஷேக பணிகளில் இழுபறி ஏற்பட்டு வருவதால், இந்தாண்டும் பங்குனி உத்திர திருவிழா நடக்குமா என்ற சந்தேகமும் பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது. எனவே, கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  


இதுகுறித்து பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலா கூறுகையில்,"கோவிலின் உள்புறத்தில் பணிகள் முடிவடைந்தது. ராஜகோபுரம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ராஜகோபுரத்தில் உள்ள சிலைகளில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும், 12 ஆண்டுகளுக்கு நிலைத்து இருக்க வேண்டும் என்பதால், அதனை சரிசெய்து, வர்ணம் பூசப்படுகிறது. இதனால், காலதாமதம் ஏற்படுகிறது. இருப்பினும், தை மாதத்தில், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளதால், விரைந்து பணிகள் முடிக்கப்படும்,"என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar