Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீபம்; சிறப்பு ... மாமல்லையில் கர்நாடக பக்தர்கள் அடிப்படை வசதிகளின்றி அவதி மாமல்லையில் கர்நாடக பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் ஈஷாவில் கடைபிடிக்கப்படுகிறது தருமபுரம் ஆதினம் பாராட்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் ஈஷாவில் கடைபிடிக்கப்படுகிறது தருமபுரம் ஆதினம் பாராட்டு

பதிவு செய்த நாள்

12 டிச
2024
11:12

தொண்டாமுத்தூர்; கோவை, ஈஷா யோகா மையத்திற்கு வந்த தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருமூலர் திருமந்திரத்தில் கூறிய நான்கு நெறிகளும் ஈஷாவில் கடைபிடிக்கப்படுகிறது என, வாழ்த்தியுள்ளார்.


தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றுமுன்தினமும், நேற்றும், கோவை, ஈஷா யோகா மையத்திற்கு வருகைபுரிந்தார். அவரை, ஈஷா பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் தேவாரப்பாடல்களை பாடினர். தொடர்ந்து, தருமபுரம் ஆதினம், தியானலிங்கத்தில் நடந்த நாத ஆராதனையில் கலந்து கொண்டார். முன்னதாக, சூர்ய குண்டம், நாகா சந்நிதி, லிங்கபைரவி சந்நிதி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தார். ஆதியோகி திவ்ய தரிசனத்தையும் நேரில் கண்டு ரசித்தார். அதோடு, ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியையும், கோசாலையையும் பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக, மஹா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ஆதியோகி ரத யாத்திரையை, தருமபுரம் ஆதினம் ஆரத்தி காட்டி வழிபட்டு துவங்கிய வைத்தார். 


இதுகுறித்து தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பகிர்கையில்,"ஈஷா யோகா மையத்தில் நடக்கும் பல விஷயங்களை, 2 நாட்களாக நேரில் கண்டோம்.


யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே" என்று திருமூலர் கூறிய 4 நெறிகளும் ஈஷாவில் கடைபிடிக்கப்படுகிறது. திருமூலர் தாயுமானவர் பதஞ்சலி முனிவர் வரிசையில், தருமை ஆதினமும் யோக கலையை பயிற்றுவிக்கும் சேவையை செய்து வருகிறது. இக்களையானது நம் சைவ சித்தாந்த மரபில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என, நான்கு நிலைகளாக சொல்லப்படுகிறது. நம்முடைய மரபில் சிவபெருமானும், மரமும் ஒன்று. சிவபெருமான் விஷத்தை தான் சாப்பிட்டுவிட்டு, அன்பர்களுக்கும், தேவர்களுக்கும் அமிர்தத்தை வழங்கினார். அதேபோல் மரங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் கார்பன் டை ஆக்ஸைடை உண்டுவிட்டு, மற்ற உயிர்களுக்கு உயிர் வாழ ஆக்ஸிஜனை வழங்குகின்றன. தருமை ஆதினத்தின் மணி விழாவை முன்னிட்டு, ஈஷா யோகா மையம், தருமை ஆதினம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து, 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொள்ளப்பட உள்ளது. திருவெண்காட்டில் உள்ள சூரிய குண்டத்திலும், சோம குண்டத்திலும் கண்ணகி நீராடி விட்டு வழிபாடு நடத்தியதாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஈஷாவிலும் சூரிய குண்டம், சந்திரகுண்டம் என, 2 குளங்களில் ஆண்களும், பெண்களும் புனித நீராடி விட்டு, தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவியை வணங்கி வழிபடுகின்றனர். யோகம் கல்வி மரம் வளர்ப்பு நாட்டு மாடுகள் வளர்ப்பு என பல சேவைகளை ஈஷா செய்து வருகிறது. வாழ்க சத்குருவின் தொண்டு, வளர்க அவரின் பணிகள்," என, தருமபுரம் ஆதினம் வாழ்த்தினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar