திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் திருமங்கை ஆழ்வாரின் அவதார தின விழா கொண்டாடப்பட்டது. கார்த்திகை மாதம் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர் திருமங்கை ஆழ்வார். இவர் திவ்ய பிரபந்த பாடல்களில் 1253 பாசுரங்களை பாடியுள்ளார். திருப்புல்லாணியில் திருமங்கை ஆழ்வாரின் உற்ஸவர் மற்றும் மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. இன்று காலை 10:00 முதல் 12:00 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்ஸவர் திருமங்கையாழ்வார் மங்களா சாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஆதி ஜெகநாதப் பெருமாள், பத்மாஸனி தாயார், ஆண்டாள் சன்னதி, தெர்ப்பசயன ராமர், பட்டாபிஷேக ராமர் ஆகியோரின் சந்ததிகளில் திருமங்கை ஆழ்வார் உற்சவர் மூர்த்தி கொண்டு செல்லப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது. பரிவட்டம் கட்டப்பட்டு நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.