பதிவு செய்த நாள்
13
டிச
2024
01:12
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமியன்று, பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். கார்த்திகை தீபத் திருவிழா, பவுர்ணமியை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாரதனைகள் நடந்தது. சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு அதிகாலை நான்கு மணிக்கு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே அதாவது ஏகன், அனேகன் என்பதை கூறும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோவில் ராகோபுரம் தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் கிரிவலம் சென்றனர். வழியேங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.