கற்பூர படியேற்ற சேவை கண்டருளிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2024 03:12
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நம்பெருமாள் கற்பூர படியேற்றச் சேவை கண்டருளினார்.
பிரசித்தி பெற்ற கார்த்திகை மாத கைசிக ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. இதில் இரண்டாம் புறப்பாடாக மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அா்ச்சன மண்டபத்தில், நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் 365 வேளையம் (வெற்றிலை ) 365 முறை கற்பூர ஹாரத்தி சமா்பித்தல் அரையா் சேவை நடந்தது. பின்னா் மேற்படி மண்டபத்திலிருந்து காலைபுறப்பட்டு படிக்கட்டு வழியாக நம்பெருமாள் ஏறும் பச்சைக் கற்பூரம் தூவப்பட்டது. இந்த கற்பூரப் படியேற்றச் சேவை கண்டருளிய நம்பெருமாள் மூலஸ்தானம் சென்று சோ்ந்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.