Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்களில் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையாருக்கு அரோகரா; 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றம்.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
அண்ணாமலையாருக்கு அரோகரா; 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றம்.. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

13 டிச
2024
06:12

திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என, பக்தி கோஷத்துடன், 40 கி.மீ,, துாரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.


திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 4ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி கருவறை எதிரில்,  10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சிறப்பு யாக பூஜை நடந்தது. பின்னர், ‘ஏகன் அனேகன்’ என்ற தத்துவத்தை விளக்கி, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்திலிருந்து, ஒரு மடக்கில் நெய் தீப விளக்கு ஏற்றப்பட்டு, அதை கொண்டு ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு, அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பரணி தீபத்தை, கையில் ஏந்தியவாறு எடுத்து சென்று, அம்மன் சன்னதி உள்ளிட்ட கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.  


தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் தீர்த்தவாரி நடந்தது. பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தனித்தனி தங்க விமானத்தில் மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் பிரகாரத்தில், தீப தரிசன மண்டபத்தில் தீபத்தை காணும் வகையில், மலையை நோக்கியவாறு அமர்ந்தனர். பார்வதி அம்மனுக்கு சிவபெருமான் இடபாகம் அளித்ததை நினைவு கூறும் வகையில், அர்த்தநாரீஸ்வரராய் கோவிலினுள் இருந்து மலையை நோக்கி பார்த்தபடி மாலை, 5:59 மணிக்கு வெளிவர காலையில் ஏற்றப்பட்ட பரணி தீப விளக்கிலிருந்து, கோவில் கொடி மரம் எதிரில் உள்ள அகண்ட தீபத்தில், தீபம் ஏற்றப்பட்டு அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றப்பட்டு, 2,668 அடி உயர மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காட்டப்பட்டது.  அதே நேரத்தில், மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என, பக்தி பரவச கோஷமிட்டு வழிபட்டனர். இந்த மஹா தீபம், 11 நாட்கள் எரியும், இவை,  40 கி.மீ., துாரம் வரை தெரியும். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar