திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்களில் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2024 06:12
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கார்த்திகை தீபவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றியும், சுவாமி புறப்பாடும் நடந்தது.
இன்று மாலை 6:00 மணிக்கு திருத்தளிநாதர் கோயிலிலிருந்து மேளாதாளத்துடன் ஆதி திருத்தளிநாதர் கோயில் சென்றனர். மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் சொக்கநாதருக்கு சொக்கப்பனை ஏற்றி வழிபட்டனர். பின்னர் திருத்தளிநாதர் கோயிலில் சந்திரசேகரர் சுவாமியும்-சிவகாமி அம்பாள் அலங்காரத்தில் எழுந்தருளினர். தீபாராதனைக்குப் பின் பிரகாரம் வலம் வந்தனர். தொடர்ந்து மூலவர் சுவாமி,அம்பாள் சன்னதிகளில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பின்னர் திருநாள் மண்டபம் எழுந்தருளினர். தொடர்ந்து 3ம் பிரகாரத்தில், திருநாள் மண்டபம் எதிரில் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் சந்திரசேகரர், அம்பாளுக்கு திருச்சாந்து சாற்றப்பட்டது. பின்னர் சுவாமியும்,அம்பாளும் திருவீதி வலம் வந்தனர். முன்னதாக கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு காலை 11:30 மணிக்கு மூலவர் சுப்பிரமணியர்,வள்ளி,தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.