பதிவு செய்த நாள்
17
டிச
2024
10:12
புதுச்சேரி; புதுச்சேரி ராமானுஜர் ப்ரபக்தி இயக்கம், மார்கழி மஹோத்ஸவம் கமிட்டி மற்றும் சாரதா கலாமந்திர் இசை நாட்டியப்பள்ளி சார்பில், 13ம் ஆண்டு மார்கழி மஹோத்ஸவம் எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம் சாராதம்பாள் ஆலயத்தில் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, பாலுஸ்வாமி தீட்சிதர் குழுவினரின் வயலினிசை நடந்தது. இந்த மஹோத்ஸவம் அடுத்த மாதம் 14ம் தேதி வரை 30 நாட்கள் நடக்கிறது. இதில் தினமும் ஒரு திருப்பாவையும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை விஷ்ணு, லட்சுமி, லலிதா சஹஸ்ரநாமம் சேவித்தலும், பிரபல இசைக் கலைஞர்களின் இசை, நாட்டியம், நாம சங்கீர்த்தனநிகழ்ச்சிகளும் நடக்கிறது. வரும் 25ம் தேதி காலை 9 மணிக்கு திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியும், வரும் 30ம் தேதி அனுன் ஜெயந்தி விழாமற்றும்ஏக தின லட்சார்ச்சனையும்நடக்கிறது. அடுத்த மாதம் 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி சிறப்பு நிகழ்ச்சியும், 11ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் உற்சவமும் நடக்கிறது.