பழநி கோவிலில் மார்கழி சிறப்பு பூஜை; ஆனந்த விநாயகருக்கு சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2024 10:12
பழநி; பழநி கோவிலில் குரோதி ஆண்டு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி கோயிலில் குரோதி ஆண்டு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. திருவாவினன்குடி பெரியநாயகம் கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருஆவினன்குடி பெரியநாயகி அம்மன் கோயில் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தனுர் மாத பூஜைகள் பழநி கோயில்களில் துவங்கின.