கோவை; சிரவணபுரம் கௌமார மடாலயம் அரங்கில் நடைபெற்ற சிரவையாதீன ஆதி குருமுதல்வர் குருமகாசந்திதானம் இராமானந்த சுவாமிகள் 68வது ஆண்டு நிறைவுக் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தமான்மியத்தில் திருமால் திருத்தொண்டர்கள் நூலை மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். தென்சேரிமலை, திருநாவுக்கரசு நந்தவனம் திருமடம், முத்து சிவராமசாமி அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், பழனியாதீனம் சாது சண்முக அடிகளார், வேளாண் கல்லூரி கல்வி இயக்குனர் குமாரசுவாமி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.