சந்தன காப்பு அலங்காரத்தில் ராஜ அஷ்ட விமோசன மஹா கணபதி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2024 02:12
மேட்டுப்பாளையம்; சிவன் புரம் ஆசிரியர் காலனி அருகே உள்ள ஸ்ரீ ராஜ அஷ்ட விமோசன மஹா கணபதி கோவிலில் மார்கழி மாத சுக்ரவார சிறப்பு பூஜை நடைபெற்றது. இக்கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சுக்ரவார சிறப்பு பூஜையில் சந்தன காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.