கும்பகோணம் ; பாபநாசம் அருகே ஸ்ரீ அய்யப்பன் சுவாமிக்கு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலக நன்மை வேண்டி கடவுளுக்குரிய ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி பூக்களைத் தூவி அர்ச்சனை செய்வது ’சகஸ்ரநாமம்’. இதனை நூறு முறை செய்வது ’லட்சார்ச்சனை’. எனப்படும். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உத்தாணி ஸ்ரீ முத்து முனியாண்டவர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யப்பன் சுவாமிக்கு உலக நன்மை வேண்டி பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பூக்களை தூவி அர்ச்சனை செய்து, சகஸ்ர நாமம் சொல்லி லட்சார்ச்சனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அய்யப்பன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு மகா தீபாராதனையும் பஜனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.