கம்பமெட்டு ரோட்டில் பாலிதின் பைகள் : ஐயப்ப பக்தர்கள் தவிர்க்க வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2024 04:12
கம்பம்; கம்பமெட்டு ரோட்டில் செல்லும் ஐயப்ப பக்தர்கள் குரங்குகள் கூட்டத்திற்கு பாலிதின் பைகளில் வைத்து உணவு பொருள்களை வீசியெறிந்து செல்கின்றனர். இதை தவிர்க்க பக்தர்கள் முன்வர வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை , மார்கழி | தை மாதங்களில் மகர விளக்கு, மண்டல பூஜை சீசனில் தென் மாநிலங்களை சேர்ந்த பத்தர்கள் லட்சக்கணக்கில் சபரிமலை யாத்திரை செல்கி கிறனர். பெரும்பாலான பக்தர்கள் தேனி, கம்பம் வழியாக செல்வது வழக்கம். குமுளி மலைப் பாதையில் ஏற்படும் நெருக்கடி காரணமாக, டிச. 20 ம் - தேதிகளில் சபரிமலை செல்லும் வாகனங்களை கம்பமெட்டு ரோட்டில் திருப்பி விடுவார்கள். ஒரு வழிப்பாதை நடைமுறைப்புத்தப்படும். இந்தாண்டும் டிச. 20 முதல் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. கம்பமெட்டு மலைப் பாதையில் குரங்குகள் கூட்டம் அதிகம் உலா வருகிறது. ஐயப்ப பக்தர்கள் உணவு, பிஸ்கட் மற்றும் பழங்களை பாலிதின் பைகளில் வைத்து வீசி செல்கின்றனர். குரங்குகள் உணவு பொருள்களுடன், பாலிதின் பைகளையும் சேர்ந்து சாப்பிடுகிறது. இதனால் குரங்குகளின் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே ஐயப்ப பக்தர்கள் பாலிதின் பைகளை வீசி எறிவதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக போலீசாரும் ஐயப்ப பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.