Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எருமேலியில் நாளை பேட்டை துள்ளல்; ... சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் எரிமேலி பேட்டை துள்ளல் நிறைவு: இன்று முதல் சன்னிதானத்தில் சுத்தி கிரியைகள்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் எரிமேலி பேட்டை துள்ளல் நிறைவு: இன்று முதல் சன்னிதானத்தில் சுத்தி கிரியைகள்

பதிவு செய்த நாள்

12 ஜன
2026
10:01

சபரிமலை; எருமேலியில் நேற்று நடைபெற்ற அம்பலப்புழா - ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாபரணம் இன்று பந்தளத்தில் இருந்து புறப்படும் நிலையில் சபரிமலையில் சுத்திகிரியைகள் இன்று தொடங்குகிறது.


சபரிமலையில் மகரஜோதி தரிசனம் 14-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் நடைபெறும் அம்பலப்புழா -ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நேற்று நடைபெற்றது. பகல் 12:30 மணிக்கு ஆகாயத்தில் வட்டமிட்டு பறந்த கருடனை கண்டதும் எருமேலி பேட்டை சாஸ்தா கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானையுடன் அம்பலப்புழா பக்தர்கள் பேட்டை துள்ளி புறப்பட்டனர். இவர்கள் வாவர் பள்ளிவாசலை வலம் வந்த பின்னர் பேட்டை துள்ளியபடி எருமேலி பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்தனர். இதுபோல மாலை 3:00 மணிக்கு ஆகாயத்தில் ஒளிவிட்டு பிரகாசித்த நட்சத்திரத்தை கண்டதும் ஆலங்காடு பக்தர்கள் குழுவினர் பேட்டை துள்ளி பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்தனர். சுவாமி திந்தகத்தோம்... ஐயப்ப திந்தகத்தோம் என்ற கோஷத்தால் எருமேலி நேற்று திணறியது .பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பேட்டை துள்ளலில் கலந்து கொண்டனர். இந்த பேட்டை துள்ளலுடன் எருமேலியில் பேட்டை துள்ளல் நிறைவு பெற்றது. பந்தளத்திலிருந்து திருவாபரண பவனி இன்று மதியம் 1:00 மணிக்கு புறப்படுகிறது. பந்தளம் அரண்மனையில் உள்ள திருவாபரணங்கள் இன்று அதிகாலை முதல் பந்தளம் சாஸ்தா கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். பகல் 12:30 மணிக்கு உச்ச பூஜை நடைபெற்றதும் பேடகங்கள் அடைக்கப்பட்டு தலை சுமடாக பவனியாக புறப்படும். இது 14 -ம் தேதி மாலை சன்னிதானம் வந்தடையும். மகரஜோதிக்கு முன்னோடியாக சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும் சுத்தி கிரியைகள் இன்று தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பின்னர் பிராசாத சுத்தி பூஜைகளை தந்திரி மகேஷ் மோகனரரு நடத்துவார். நாளை மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக பிம்பசுத்தி பூஜைகள் நடைபெறும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar