பதிவு செய்த நாள்
23
டிச
2024
10:12
அன்னுார்; புளியம்பட்டி, தர்மசாஸ்தா கோவிலில், பதினெட்டாம் படி திறப்பு விழா நடந்தது.
புளியம்பட்டி, சத்தி ரோடு, நேரு நகரில், பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுக்கு ஒரு முறை, மார்கழி மாதம் முதல் சனிக்கிழமையன்று 18ம் படி திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் அய்யப்பனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 7:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சபரிமலையில் உள்ளது போலவே வடிவமைக்கப்பட்ட பதினெட்டாம் படியில், பல ஆயிரம் பக்தர்கள் இரவு 7:00 மணி வரை சென்று ஐயப்பனை வழிபட்டனர். ஐயப்பன் மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். இரவு 7:00 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன் நடை அடைக்கப்பட்டது.