வால்பாறையில் மண்டல பூஜை விழா; பாலக்கொம்பு எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2024 12:12
வால்பாறை; மண்டல பூஜை திருவிழாவையொட்டி ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின், 38ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நேற்று முன் தினம் காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொள்ளாச்சி ரங்கசமுத்திரம் உச்சிகாளியம்மன் கலைக்குழு சார்பில் வள்ளிக்கும்மியாட்டம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு வந்தனர். விழாவில் நேற்று காலை, 11:00 மணிக்கு ஐயப்பசுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜையும், மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட் தேரில் ஐயப்பசுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை அகிலபாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.