Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷா யோகா மையத்தில் இருந்து ஆதியோகி ... ஈஷாவில் சக்திமிக்க சப்தரிஷி ஆரத்தி; பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமட ஜீயர், காசி உபாசகர்கள் பங்கேற்பு ஈஷாவில் சக்திமிக்க சப்தரிஷி ஆரத்தி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளிய கால பைரவ அஷ்டமி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளிய கால பைரவ அஷ்டமி விழா

பதிவு செய்த நாள்

23 டிச
2024
02:12

பரமக்குடி; அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளிய கால பைரவ அஷ்டமி விழாவில், பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் சுவாமி, அம்பாள் உட்பட பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்தனர்.


பரமக்குடியில் மார்கழி மகா உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. தினமும் சிவன் கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை பாடப்படுகிறது. இன்று கால பைரவ அஷ்டமி விழாவையொட்டி, பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் 4:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. பின்னர் மகா பூர்ணாகுதி நடந்து, மூலவர் சந்திரசேகர சுவாமி, விசாலாச்சி அம்பிகைக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 10:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி பிரியாவிடையுடனும், விசாலாட்சி அம்பிகை அலங்காரமாகி தனித்தனியாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். அப்போது விநாயகர், முருகன் முன் செல்ல, பஞ்ச மூர்த்திகள் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளிய லீலையில் பக்தர்களுக்கு அரிசி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் மற்றும் நயினார்கோவில் நாகநாத சுவாமி உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar