பதிவு செய்த நாள்
23
டிச
2024
04:12
வால்பாறை; அய்யர்பாடி எஸ்டேட் ஐயப்ப சுவாமி கோவில் திருவிழாவில், பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி வழிபட்டனர்.
வால்பாறை அடுத்துள்ளது அய்யர்பாடி முதல் பிரிவு எஸ்டேட்டில் உள்ள, ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி ஐயப்ப சுவாமிக்கு தினமும் காலை, மாலை சிறப்பு அபிேஷக, ஆராதனைகளும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. விழாவில், முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. பூக்குண்டத்தில் அருளாளி பூப்பந்து உருட்டிய பின், சுவாமி அருள் பெற்ற ஐயப்ப பக்தர்கள் பூக்குண்டம் இறங்கினர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.